TrustPay எப்படி வேலை செய்கிறது

TrustPay எளிமையானது: இரு தரப்பும் திருப்தி அடையும் வரை பணம் நடுவில் பாதுகாப்பாகக் காத்திருக்கும். வாங்குபவர்களுக்கும் விற்பனையாளர்களுக்குமான முழுப் பயணம் இதோ.

நிஜத்தில் இது இப்படித்தான் இருக்கும்

பாதுகாப்பான டீல் என்பது ஒரு சாதாரண சாட் தான் — நடுவில் பணத்தை TrustPay வைத்திருக்கும்.

@saree.kade
ஆன்லைன்
ஹாய்! சேலை டெலிவரியுடன் Rs. 15,000 🙂
சூப்பர் — TrustPay மூலம் செய்யலாமா?
கண்டிப்பாக, இதோ லிங்க்
TrustPay பணக் கோரிக்கை
கைத்தறி சேலை · Rs. 15,000
Rs. 15,000 பெறப்பட்டு TrustPay-இடம் பாதுகாப்பாக உள்ளது
அனுப்பிவிட்டேன்! டிராக்கிங்: CMB-4471 📦
வாங்குபவர் டெலிவரியை உறுதிப்படுத்தினார்
Rs. 15,000 @saree.kade-க்கு விடுவிக்கப்பட்டது
ரொம்ப அழகா இருக்கு. நன்றி! 😍

நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால்

  1. 1

    விரும்பியதைக் கண்டுபிடியுங்கள்

    இப்போது செய்வது போலவே Instagram, Facebook அல்லது வேறு எங்கும் ஷாப்பிங் செய்யுங்கள்.

  2. 2

    TrustPay பரிவர்த்தனையை உருவாக்குங்கள்

    பொருள், விலை, டெலிவரி நிபந்தனைகளை விவரித்து நீங்களோ விற்பனையாளரோ ஒரு பரிவர்த்தனையைத் தொடங்குகிறீர்கள்.

  3. 3

    TrustPay-க்கு பணம் செலுத்துங்கள்

    நீங்கள் செலுத்துவது எங்களுக்கு — விற்பனையாளருக்கு அல்ல. பணம் பாதுகாப்பாக உள்ளது என விற்பனையாளருக்கு அறிவிக்கப்படும்.

  4. 4

    உங்கள் ஆர்டரைப் பெறுங்கள்

    விற்பனையாளர் அனுப்புகிறார். வந்த பொருளை, பேசி முடிவு செய்ததோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

  5. 5

    உறுதிப்படுத்துங்கள் அல்லது முறைப்பாடு செய்யுங்கள்

    திருப்தியா? உறுதிப்படுத்துங்கள், பணத்தை விற்பனையாளருக்கு விடுவிக்கிறோம். திருப்தி இல்லையா? 3 நாட்களுக்குள் முறைப்பாடு செய்யுங்கள் — நாங்கள் தலையிடுகிறோம்.

நீங்கள் விற்கிறீர்கள் என்றால்

  1. 1

    சரிபார்க்கப்படுங்கள்

    உங்கள் விவரங்களை ஒரே முறை சமர்ப்பியுங்கள் — சரிபார்ப்புக்கு 24 மணி நேரத்திற்கும் குறைவே ஆகும்.

  2. 2

    செக்அவுட்டில் TrustPay-ஐ வழங்குங்கள்

    ரிஸ்க்கான நேரடி பண மாற்றத்தைக் கேட்பதற்குப் பதிலாக, வாங்குபவருடன் ஒரு TrustPay பரிவர்த்தனையைப் பகிருங்கள்.

  3. 3

    நம்பிக்கையுடன் அனுப்புங்கள்

    வாங்குபவரின் பணம் எங்களிடம் உள்ளது என்று நாங்கள் உறுதிப்படுத்திய பிறகுதான் நீங்கள் அனுப்புவீர்கள்.

  4. 4

    வாங்குபவர் டெலிவரியை உறுதிப்படுத்துகிறார்

    வாங்குபவர் உறுதிப்படுத்தியதும் — அல்லது முறைப்பாட்டுக் காலம் முடிந்ததும் — பணம் உங்களுடையது.

  5. 5

    பணத்தைப் பெறுங்கள்

    பணத்தை உங்கள் கணக்குக்கு மாற்றுகிறோம். சார்ஜ்பேக் இல்லை, போலி பேமென்ட் ஸ்கிரீன்ஷாட்கள் இல்லை.

ஏதாவது தவறாகப் போனால்?

ஆர்டர் வரவே இல்லை என்றாலோ பேசி முடிவு செய்தது இல்லை என்றாலோ, டெலிவரி உறுதிப்படுத்தல் கோரப்பட்டதிலிருந்து 3 நாட்களுக்குள் வாங்குபவர் முறைப்பாடு செய்யலாம். எங்கள் குழு இரு தரப்பின் ஆதாரங்களையும் — புகைப்படங்கள், சாட் வரலாறு, கூரியர் டிராக்கிங் — மதிப்பாய்வு செய்து, பணத்தை விற்பனையாளருக்கு விடுவிக்கும் அல்லது வாங்குபவருக்கு முழுப் பணத்தையும் திருப்பித் தரும்.

  • முறைப்பாடு செய்வது இலவசம்
  • பெரும்பாலான முறைப்பாடுகள் 3 வேலை நாட்களுக்குள் தீர்க்கப்படுகின்றன
  • முடிவுகள் இரு தரப்பின் ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன

முயற்சி செய்யத் தயாரா?

இலவச கணக்கை உருவாக்குங்கள்